தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனா - திருமாவளவன் சந்திப்பு
அட்மின் மீடியா
0
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு
தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா இணைந்த நிலையில் திருமாவளவனுடன் சந்திப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்தார்.
விஜய் கட்சியில் இணைந்த உடனே அவர் திருமாவளவனைச் சந்தித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்
