Breaking News

தமிழகத்தில் மினி பஸ் கட்டணம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் மினி பஸ் கட்டணம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்

தமிழகத்தில் மினி பேருந்து கட்டணங்களை மாற்றியமைத்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது


சென்னையின் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மினி பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலிக்கவும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் இந்த புதிய விரிவான மினி பேருந்து திட்டம் வரும் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 இதன் உடன் சேர்த்து மினி பேருந்து கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த கட்டண உயர்வு ஏற்கனவே இருக்கும் பர்மிட்தாரர்களுக்கும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் பர்மிட் பெறுவோருக்கும் பொருந்தும்.

முதல் இரண்டு கிலோமீட்டர்களுக்கு 4 ரூபாய் கட்டணமாக நிர்ணயம்

இரண்டாம் நிலை (4 கிலோமீட்டர் வரை) நான்கு ரூபாய் கட்டணமாக நிர்ணயம்

மூன்றாம் நிலை (6 கிலோமீட்டர் வரை) 5 ரூபாய் கட்டணமாக நிர்ணயம்
 
நான்காம் நிலை (8 கிலோமீட்டர் வரை) 6 ரூபாய் கட்டணமாக நிர்ணயம்

ஐந்தாம் நிலை (10 கிலோமீட்டர் வரை) 7 ரூபாய் கட்டணமாக நிர்ணயம்

ஆறாம் நிலை (12 கிலோமீட்டர் வரை) 8 ரூபாய் கட்டணமாக நிர்ணயம்
 
ஏழாம் நிலை (14 கிலோமீட்டர் வரை) 9 ரூபாய் கட்டணமாக நிர்ணயம்

எட்டாம் நிலை (16 கிலோமீட்டர் வரை) 9 ரூபாய் கட்டணமாக நிர்ணயம்

ஒன்பதாம் நிலை (18 கிலோமீட்டர் வரை) 9 ரூபாய் கட்டணமாக நிர்ணயம்

பத்தாம் நிலை (20 கிலோமீட்டர் வரை) 10 ரூபாய் கட்டணமாக நிர்ணயம்


இந்த புதிய கட்டண உயர்வு 2025 மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback