Breaking News

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு சென்னையில் ஒருவர் கைது! முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த அல்பாசித் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னையில் இன்று (ஜன. 28) கைது செய்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ்-உடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் நடைபெற்ற சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது.

சென்னை புரசைவாக்கம் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடம் மற்றும் மயிலாடுதுறையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை செய்த அல்பாசித் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் இன்று (ஜன. 28) காலை கைது செய்தனர்.

இவர் மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்தவர். சென்னையில் 8 மாதங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்துக்கொண்டே ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் அல்பாசித் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அல்பாசிக், மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாசலைச் சேர்ந்தவர். அவர், சென்னையில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து கொண்டே வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் ஐ.எஸ்., இயக்கத்துக்கு ஆள் சேர்க்க மூளைச்சலவை செய்தது தெரிய வந்தது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback