Breaking News

பெரியார் குறித்து அவதூறு சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பெரியார் குறித்து அவதூறு சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார் முழு விவரம்



பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரிசென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் தலைமையில் புகார் அளிப்புதிராவிடர் விடுதலைக் கழகம் சார்பிலும் சீமான் புகார் அளிப்பு.

கடலூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 

கடலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 

தமிழை சனியன் என்று சொன்ன பெரியார் எந்த மொழியில் எழுதினார். என் மொழியை ஒன்றுமில்லை என்று சொல்லும்போது, பிறகு என்ன சமூக மாற்றம், சீர்திருத்தம், அரசியல் இருக்கிறது. ஆகச் சிறந்த உலக வாழ்வியல் நெறி திருக்குறளை மலம் என்று சொல்லிவிட்டீர்கள்.

அவரைக் கொண்டு வந்து கொள்கை வழிகாட்டி என்றால், எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி. பெண்ணிய உரிமையா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இரு என சொன்னது பெண்ணிய உரிமையா?

தன் தோட்டத்தில் இருந்த 1000 தென்னை மரங்களை வெட்டினார். அவர் பகுத்தறிவாளர் தானே, என் தோட்டத்தில் கள்ளு இறக்க அனுமதி இல்லை என்று சொல்லியிருந்தால் போதுமே எதற்கு மரங்களை வெட்ட வேண்டும். இது பகுத்தறிவா?

உலகில் எந்த நாட்டில் மது இல்லை. அனைவரும் மது அருந்துகிறார்கள். மது குடிக்க வேண்டாம் என்பது, கட்டிய மனைவியுடன் படுக்க வேண்டாம் என்று சொல்வதற்கு சமம் என்று சொல்லியிருக்கிறாரா? இல்லையா? அப்போ இந்த இடத்தில் ஏற்கிறீர்களா

சமூகநீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கிறதா அல்லது இடஒதுக்கீட்டிற்கும் ஆணமுத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா? போராடி பெற்றுக்கொடுத்தது ஆணமுத்தா, பெரியாரா? என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்

திமுக புகார்:-

பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சட்டத்துறை துணை செயலாளர் புகார் மனு அளித்துள்ளார். 

திராவிடர் விடுதலைக் கழகம் புகார்:-

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பிலும் சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

சீமான் பேசிய செய்தியின் உண்மை என்ன:-

உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இரு என பெரியார் கூறவில்லை 

இந்த செய்தி பல ஆண்டுகளாக பரவும் பொய்யான செய்தி ஆகும். பலரும் ஆதாரமாகக் கூறப்படும் 11.05.1953 விடுதலை நாளேட்டில் அப்படியொரு செய்தி வெளியாகவில்லை என்பதுதான் உண்மை

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback