வெடிகுண்டு வீசுவேன், உன்னை புதைச்ச இடத்தில் புல் கூட முளைக்காது சீமான் பரபரப்பு பேச்சு வைரல் வீடியோ
வெடிகுண்டு வீசுவேன், உன்னை புதைச்ச இடத்தில் புல் கூட முளைக்காது… சீமான் பரபரப்பு பேச்சு…!!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்து வருகிறார்.பிரசாரத்தில் சீமான் பேசுகையில்
பிரபாகரனிடன் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள். நீங்கள் வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம்.. என் தலைவன் பிரபாகரன் கையில் வைத்திருப்பது வெடிகுண்டு.நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு. நான் உன் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டை உன் மீது வீசுகிறேன். என்ன நடக்கிறது என பார. ஏய்.. வெச்சிருக்கேன்.. இன்னும் வீசவில்லை… வெடிகுண்டுகளை வீசினேன் என்றால் என்ன ஆவாய் என பார்த்துக் கொள். உன்னை புதைச்ச இடத்தில் புல் கூட முளைக்காது. ‘பி கேர்ஃபுல் சேட்டையை வேறு எங்காவது வைத்துக் கொள். என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் கூடுதல் நேரம் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடத்தியதாக சீமான் மீது பறக்கும் படை அதிகாரி நவீன் அளித்த புகாரில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1884489690025451556
Tags: அரசியல் செய்திகள்
