சென்னை ஈசிஆரில் காரில் பயணித்த பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு வைரலாகும் வீடியோ முழு விவரம்
சென்னை ஈசிஆரில் காரில் பயணித்த பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு வைரலாகும் வீடியோ முழு விவரம்
முட்டுக்காடு பகுதியில் காரை பின்னோக்கி எடுத்த போது சொகுசு காரில் உரசிய பெண்கள் அழைத்தும் நிற்காமல் சென்றதால் பெண்கள் சென்ற காரை துரத்திய இளைஞர்கள் வைரல் வீடியோ
சென்னை ஈசிஆர் முட்டுகாடு படகு குழாம் மேம்பாலம் மீது கோவளம் கடலில் பக்கிங்காம் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்த்து ரசிப்பதற்காக, அந்த 4 ஆண்கள் ஒரு காரில் வந்துள்ளனர்.
அந்த ஆண்கள் நிறுத்திய காரின், பின்னால் புகார் அளித்த பெண்கள் சென்ற கார் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், முதலில் அங்கிருந்து அந்த கார் கிளம்பியிருக்கிறது. அப்போது அவர்களின் கார் முன்னாள் நின்றுகொண்டிருந்த இளைஞர்களின் காரை லேசாக உரசியதாக கூறப்படுகிறது.
காரை உரசிவிட்டு மன்னிப்பு கூட கேட்கவில்லை என்பதால் அந்த காரை இளைஞர்கள் துரத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இளைஞர்கள் உள்ள கார், கிழக்கு கடற்கரை சாலையில் தங்களை வெகு தூரமாக துரத்துவதை பார்த்த பெண்கள் பெரும் அச்சத்தில் அவர்களது செல்போனில் அந்த காட்சியை வீடியோவாக பதிவிட்டபடியே சென்று கானத்தூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
தற்போது வைரல் ஆகும் வீடியோவில்:-
திமுக கட்சி கொடியோடு கார் ஒன்று சென்னை இசிஆர் சாலையில் நடு ரோட்டில் நிற்கிறது.அதில் இருந்து இளைஞர் ஒருவர் வேகமாக இறங்கி பின்னால் நிற்கும் பெண்கள் வந்து கொண்டிருந்த காரை நோக்கி ஓடி வருகிறான். இதனால் இதனால் பயந்து அலறிய இளம்பெண்கள் காரை பின் முன்பக்கமாக எடுக்கும்போது காரின் கதவை அந்த இளைஞர் தட்டுகிறார்.
இதனையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தங்களது உறவினர்களுக்கு அந்த பெண் போன் செய்ய கூறுகிறார்கள். காரை பின் பக்கமாக ரிவர்ஸ் எடுத்து காரை வேறு பக்கமாக இயக்குகிறார்கள். இருந்த போதும் அந்த காரை விடாமல் துரத்தும் இளைஞர்கள் ஒரு கட்டத்தில் காரை மறித்து மிரட்டுகிறார்கள்.
புகார்:-
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களான, சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியில் வசித்து வரும் பெண் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இச்சம்பவம் குறித்து, வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1884535808704856126
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
