தவெகவில் இணைந்தனர் அதிமுக ஐடி விங் மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா
தவெகவில் இணைந்தனர் அதிமுக ஐடி விங் மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா
அதிமுக ஐடி விங் மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்
அதேபோல் விடுதலை சிறுத்தைகளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார்
தவெக-வின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆகிறார் ஆதவ் அர்ஜுனாCTR. நிர்மல் குமாருக்கு கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு)- தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமார் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்தார்.
முன்னதாக, நிர்மல் குமாரின் ட்விட்டர் பக்கத்தில் அதிமுக பதவிகளையும், இரட்டை இலை சின்னத்தையும் நிர்மல் குமார் நீக்கியிருந்தார்.
இதனிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அவர் பனையூரில் அலுவலகத்திற்கு வந்து விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார்.
Tags: அரசியல் செய்திகள்
