ஈரோடு தேர்தல் பரப்புரையில் வெடிகுண்டு வீசுவேன் என வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது வழக்குப்பதிவு
வெடிகுண்டு வீசுவேன் என வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது வழக்குப்பதிவு
ஈரோட்டில் தேர்தல் பரப்புரையின் போது "வெடிகுண்டு வீசுவதாக" பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்து வருகிறார்.பிரசாரத்தில் சீமான் பேசுகையில்
பிரபாகரனிடன் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள். நீங்கள் வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம்.. என் தலைவன் பிரபாகரன் கையில் வைத்திருப்பது வெடிகுண்டு.நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு. நான் உன் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டை உன் மீது வீசுகிறேன். என்ன நடக்கிறது என பார. ஏய்.. வெச்சிருக்கேன்.. இன்னும் வீசவில்லை… வெடிகுண்டுகளை வீசினேன் என்றால் என்ன ஆவாய் என பார்த்துக் கொள். உன்னை புதைச்ச இடத்தில் புல் கூட முளைக்காது. ‘பி கேர்ஃபுல் சேட்டையை வேறு எங்காவது வைத்துக் கொள். என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய கருங்கல்பாளையம் போலீசார், சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு எதிராக செயல்பட்டு, குற்றம் செய்யத் தூண்டும் வகையில் பேசுதல், மதம் இனம் மொழி அடிப்படையில் பிரிவினை வாதத்துடன் தவறான தகவல்களை உள்நோக்கத்துடன் பரப்புதல், தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தி வன்முறையை தூண்டுதல் என BNS-351(c), BNS-196, BNS-(1)(b)(1)(c) பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்
