Breaking News

டிவிட்டரில் தொடர்ந்து அவதூறு கருத்து வெளிநாட்டிலிருந்து வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி விமான நிலையத்தில் கைது

அட்மின் மீடியா
0

ட்விட்டரில் முதல்வர் குடும்பப் பெண்கள் புகைப்படங்களை வக்கிரமாக மார்பிங் செய்து பதிவிட்டு மேலும் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் விடுமுறைக்கு ஊர் வந்த நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

சென்னை சோழிங்கநல்லூர் பாலவாக்கத்தை சேர்ந்த 35 வயதான நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தோட்டா என்கிற தமிழரசன் அருள்தாஸ் (@innocentbuddyy).சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த இவர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்.நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளராக இருந்து வந்தார். 

மேலும் ட்விட்டரில் இயங்கும் மாற்று கட்சிகளைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக மார்பிங் செய்து ட்விட்டரில் வெளியிட்டு வந்துள்ளார்,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை குறித்து முகநூலில் தரக்குறைவான விமர்சனங்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். 

இதுகுறித்து, சைபர் க்ரைம் போலீஸார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505(1)(பி), 509 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

தமிழரசன் வெளிநாட்டில் இருந்ததால் விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், பஹ்ரைன் நாட்டிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை விமானம் மூலம் மும்பை வந்துள்ளார். தமிழரசன் குறித்து எமிக்ரேஷன் அலுவலகத்தில் ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால், மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய தமிழரசனை மும்பை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சைபர் கிரைம் போலீசார் மும்பைக்கு சென்று தமிழரசனை கைது செய்தனர். தமிழரசனை மயிலாடுதுறையில் உள்ள நீதிமன்றத்தில் நிதிபதி கலைவாணியிடம் ஆஜர்படுத்தினர். 

விசாரணையின் பின்னர், தமிழரசனை 15 நாட்கள் கோர்ட்டு காவலில் வைத்திருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback