தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பின் தென் சென்னை ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள் முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பின் தென் சென்னை ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள் முழு விவரம்
தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பின், தென் சென்னை பகுதி ஆலோசனை கூட்டம் வேளச்சேரி மஸ்ஜித் இலாஹியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ஹாஜி M. முஹம்மது பஷீர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
பொதுச் செயலாளர் ஹாஜி S.முஹம்மது பெய்க் மற்றும் தென் சென்னை மண்டல பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தார்கள். மேலும் தென் சென்னை மண்டலத்தைச் சார்ந்த மஸ்ஜித்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
இதில் தென் சென்னை மண்டல பொறுப்பாளரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொருளாளருமான ராயல் பீர் முகமது கலந்துகொண்டு இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த தமிழக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட 7 தீர்மானங்களை வாசித்தார்.
மேலும் இக் கூட்டத்தில் எம். மன்சூர்காசிஃப், ஏ.யு.அபுபக்கர்உஸ்மானி, சி.நிஜாம்பாஷா சாஹிப், நவாஸ் ஷாஹிப் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...
1. இக்கூட்டமைப்பை பலப்படுத்தும் விதமாக பகுதி வாரியாக, மண்டல வாரியாக, மாவட்ட வாரியாக மாநில வாரியாக இணைந்து கூட்டமைப்பிற்கு வலு சேர்ப்பது.
2. ஒவ்வொரு மஸ்ஜித் நிர்வாகிகளும் தங்கள் முஹல்லாவை ஆன்மீகக் கல்வி, கலைக்கல்வி பொருளாதாரம், சமூக நல்லிணக்கம், மனித வள மேம்பாடு போன்ற துறைகளில் மேம்பாடு அடைய முயற்சித்தல்.
3. முஹல்லா தோறும் இளைஞர் குழுவை அமைத்தல்.
4. மஸ்ஜித்களின் ஆவணங்களை சரி செய்து முறையாக பராமரித்தல்.
5. இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த தமிழக அரசை வலியறுத்துவது.
6. பட்டா இல்லாத மஸ்ஜித்களுக்கு அரசு விரைவாக பட்டா வழங்க வேண்டும்.
7.அடக்கஸ்தலம் இல்லாத பள்ளிகளுக்கு,கபரஸ்தான் ஏற்பாடு செய்து தர அரசை வலியுறுத்துவது. என 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags: தமிழக செய்திகள் மறுப்பு செய்தி

