ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 7 MLA க்கள் விலகல் முழு விவரம்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 MLA க்கள் திடீர் விலகல்!
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மதன் லால், ரோஹித் மெஹ்ராலியா, பி.எஸ். ஜூன், பவன் சர்மா உள்ளிட்ட 7 பேர் விலகியுள்ளனர். வரும் பிப்ரவரி 5ம் தேதி அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது
ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மீது வைத்திருந்த நம்பிக்கை இழந்துவிட்டதாகப் பாலம் எம்எல்ஏ பாவ்னா கவுர், கஸ்தூர்பா நகர் எம்எல்ஏ மதன் லால் ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கெஜ்ரிவால் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
டெல்லியைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. அங்கு எந்த கட்சி அல்லது கூட்டணி குறைந்தது 36 இடங்களில் வெல்கிறதோ.. அந்த கட்சியை ஆட்சியைப் பிடிக்கும்.
கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களில் ஆம் ஆத்மி வென்றிருந்தது. மேலும் 3வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் ஆம் ஆத்மி உள்ளது.
டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
