Breaking News

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் கூட்டநெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த பெண் மல்லிகா உட்பட 6 பேர் உயிரிழப்பு வீடியோ

அட்மின் மீடியா
0
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் கூட்டநெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த பெண் மல்லிகா உட்பட 6 பேர் உயிரிழப்பு வீடியோ




திருமலை திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்புவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டிக்கெட் வாங்கும் போது நேர்ந்த சோகம்உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த பெண் பக்தர் என்பது முதற்கட்ட தகவல்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஜனவரி 10ம் தேதி நடைபெறுகிறது. இதனை காண இலவச தரிசன கட்டணம் நாளை அதிகாலை முதல் வழங்கப்படும் நிலையில், இன்றே ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

இலவச டோக்கன் வழங்கும் மையங்களின் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டதில் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சீனிவாசம் கவுன்டரில் வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு உள்ள அவர், தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1877051683341017401

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback