கோவையில் பீப் பிரியாணி விற்கக்கூடாது என மிரட்டிய பாஜக நிர்வாகி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
கோவை உடையாம்பாளையத்தில் மாட்டிறைச்சி பிரியாணி விற்கக்கூடாது என மிரட்டிய பாஜக நிர்வாகி மீது 4 பிரிவுகளில் வழக்கு
351(2) கிரிமினல் குற்ற எண்ணத்துடன் மிரட்டுதல்
126(2) தனி நபர்களின் செயல்களை தடுத்தல்
192 சட்டத்துக்கு புறம்பான செயல் மூலம் ஆத்திரமூட்டுதல்
196 மதம், இனம், சாதி அடிப்படையில் பகைமை ஏற்படுத்துதல்
கோவையில் சாலையோர தள்ளுவண்டி கடை வைத்திருந்தவர்களை "பீப் பிரியாணி" விற்கக்கூடாது என மிரட்டல் வைரல் வீடியோ
கோவை, கணபதி அருகே தள்ளுவண்டிக் கடை நடத்தி வரும் தம்பதியிடம் பீப் பிரியாணி கடை நடத்தக் கூடாது என்று பாஜக நிர்வாகி ஒருவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
கோவை கணபதி அருகே உடையம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் பீப் பிரியாணி கடை வைத்துள்ள ஆபிதா தம்பதியினரை அதே பகுதியைச் சேர்ந்த மாநகர் மாவட்ட செயலாளர் (பாஜக ஓ.பி.சி. அணி) சுப்பிரமணி இந்தப் பகுதியில் மாட்டு இறைச்சி பிரியாணி விற்க வேண்டாம் என தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.இதனை ஆபிதா தம்பதியினர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அந்த வீடியோவில், மாட்டிறைச்சியை தவிர்த்து வேறு எது வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம். ஆனால், இங்கு மாட்டிறைச்சி விற்கக் கூடாது. யாரைக் கேட்டு விற்பனை செய்து வருகிறீர்கள் என வாக்குவாதம் செய்வது பதிவாகியுள்ளது.
தள்ளுவண்டி கடைக்காரரை மிரட்டிய பாஜகவின் ஓபிசி அணியின் மாநகர மாவட்ட செயலாளர் சுப்ரமணி பேசுகையில்,
"ஊர்கட்டுபாடு என்பதால் பீப் கடை போடக் கூடாது என்று சொன்னேன்" என தெரிவித்துள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/Maniamuthan12/status/1876965727871053837
இந்நிலையில் பீப் பிரியாணி கடை நடத்தும் தம்பதி பாதுகாப்பு வழங்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் சுப்பிரமணி மீது துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாஜக ஒ.பி.சி. அணி மாநகர மாவட்ட செயலாளர் சுப்பிரமணி மீது 126(2), 192, 196, 351/2 ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.
Tags: தமிழக செய்திகள்
