Breaking News

தமிழ்நாடு முழுவதும் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

 தமிழ்நாடு முழுவதும் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் முழு விவரம் இதோ


தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் 9 மாவட்டங்களுக்கு புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்ற விவரம் :

தர்மபுரி மாவட்ட ஆட்சியராக ஆர்.சதீஸ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக எஸ்.சரவணன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக சி.தினேஷ்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக எஸ்.ஷேக் முகமது ரகுமான் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கே.தற்பகராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வி.மோகன சுந்தரம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக ஆர்.சுகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக கே.சவுந்தரவள்ளி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் 

நகராட்சி நிர்வாக துறையின் இணை ஆணையர் எஸ்.சேக் அப்துல் ரஹ்மான் விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமனம்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கே.தர்பகராஜ் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம். 

பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் வி.மோகன சந்திரன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமனம். 

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் ஆர்.சுகுமார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமனம், 

ஈரோடு கூடுதல் ஆட்சியர் ஆர்.சதீஷ் தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமனம். 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியத்தின் செயல் இயக்குநர் எஸ்.சரவணன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமனம். 

மதுரை மாநகராட்சி ஆணையர் சி.தினேஷ் குமார் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம் 

தொழில் மற்றும் வர்த்தக துறை கூடுதல் இயக்குநர் கே.சிவசௌந்தரவல்லி திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம். 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே சாந்தி தோட்டக்கலைத்துறை இயக்குநராக நியமனம் 

பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையர் எஸ்.கணேஷ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சிறப்பு செயலாளராக நியமனம். 

கூடுதல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஷங்கர் லால் குமாவத் உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறையின் கூடுதல் செயலாளராக நியமனம். 

வணிகவரித்துறையின் இணை ஆணையர் துர்கா மூர்த்தி ஐஏஎஸ். TANMAG அமைப்பின் நிர்வாக இயக்குநராக நியமனம் 

அரசு பொதுத்துறையின் துணை செயலாளர் ஜெ.இ.பத்மஜா, விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம் 

மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலர் சித்ரா விஜயன், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமனம். 

தருமபுரி கூடுதல் ஆட்சியர் கௌரவ் குமார், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்கள் மற்றும் கழிவுநீர் அகற்றும் துறையின் செயல் அலுவலகராக நியமனம். 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எம்.என்.பூங்கோதை வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம்.

பழனி துணை ஆட்சியர் எஸ்.கிருஷ்ணன் சிதம்பரம் துணை ஆட்சியராக நியமனம். 

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் துறையின் மேலாண் இயக்குநர் வி தக்ஷிணாமூர்த்தி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண் தயாரிப்பு ஆணையராக நியமனம். 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், பெருநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலான் இயக்குநராக நியமனம்.  

தமிழ்நாடு சாலைத் திட்டம் 2ன் திட்ட இயக்குநர் எஸ்.ஏ.ராமன், தொழிலாளர் நலத்துறை ஆணையராக நியமனம். 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயூ, அரசுப் பொது துறையின் இணை செயலாளராக நியமனம். 

விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதகுெய் நாராயணன் மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலராக நியமனம். 

செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியர் ஆர்.அனமிகா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் இயக்குநராக நியமனம் 

தமிழ்நாடு பட்டு வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநர் ஜே.இன்னசண்ட் திவ்யா, தொழிற்கல்வித்துறையின் ஆணையராக நியமனம். 

எல்கார்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆர்.கண்ணன், கால்நடை துறையின் இயக்குநராக நியமனம். 

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் ஆட்சியர் லலிதாத்தியா நீலம், நகராட்சி நிர்வாக துறையின் இணை ஆணையராக நியமனம். 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக நியமனம். 

திருவாரூர் ஆட்சியர் டி.சாருஸ்ரீ கருவூலங்கள் மற்றும் கணக்குப்பதிவியல் துறையின் இயக்குநராக நியமனம். 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் சிகி தாமஸ் வைத்தியன், பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையராக நியமனம்.

பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறையின் ஆணையராக ஆர்.ஜெயா ஐ.ஏ.எஸ் நியமனம். 

உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறையின் இணை செயலாளர் எஸ்.பி.அம்ரித் கூட்டுறவுத்துறையின் கூடுதல் பதிவாளராக நியமனம். 

பழனி துணை ஆட்சியர் எஸ்.கிருஷ்ணன் சிதம்பரம் துணை ஆட்சியராக நியமனம் 

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் துறையின் மேலாண் இயக்குநர் வி.தக்ஷிணாமூர்த்தி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண் தயாரிப்பு ஆணையராக நியமனம்.

பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறையின் ஆணையராக ஆர்.ஜெயா ஐ.ஏ.எஸ் நியமனம், 

உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறையின் இணை செயலாளர் எஸ்.பி அம்ரித் கூட்டுறவுத்துறையின் கூடுதல் பதிவாளராக நியமனம். 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கே.பி.கார்த்திகேயன் எல்காட் மேலாண்மை இயக்குநராக நியமனம். 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு சாலை திட்ட பணிகள் 2-இன் திட்ட இயக்குநராக நியமனம். 

கைத்தறி துறை இயக்குநர் ஏ.சண்முக சுந்தரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராக நியமனம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback