Breaking News

சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேருக்கு பாலியல் வன்கொடுமை - 6 பேர் கைது நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேருக்கு பாலியல் வன்கொடுமை - 6 பேர் கைது நடந்தது என்ன முழு விவரம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது

சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேரை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 24ம் தேதி மாலை தனது பள்ளி தோழியின் இல்ல விழாவுக்கு சென்று வருவதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், சிறுமி வீடு திரும்பாத நிலையில், அவரது தாயார் திரு.வி.க.,நகர் போலீஸில் புகார் அளித்தனர்

இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மாணவியின் தோழிகளான அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியும் மாயமானது தெரியவந்தது.

விசாரணையில், மாணவிகள் 3 பேரையும் மாணவர்கள் 3 பேர் காதல் வலையில் வீழ்த்தி அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் 3 பேர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் யுகேஷ், கலிமுல்லா உட்பட மொத்தம் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். 

இதைத் தொடர்ந்து, 3 சிறுமிகளையும் மீட்ட போலீசார், அவர்களை முத்தியால்பேட்டையில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.இந்த வழக்கு திரு.வி.க நகர் போலீஸாரிடமிருந்து செம்பியம் மகளிர் போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், சிறுமிகளின் காதலர்கள் 3 பேர் மீதும் போக்சோ வழக்கில் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback