Breaking News

சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு ரூ.15. லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு

அட்மின் மீடியா
0

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுன்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடுக் கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கிவருகிறது.




சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறதுஅதிகபட்ச கடன் தொகை ரூ.15.00 இலட்சம்.

கடன் பங்குத் தொகை விவரம் பின்வருமாறு

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு : 85%

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு : 10%

பயனாளியின் பங்கு : 05%

ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 இலட்சம் வரை - 7% வட்டி விகிதம்

ரூ.1.25 இலட்சம் மேல் ரூ.5.00 இலட்சம் வரை – 8% வட்டி விகிதம்

ரூ.5.00 இலட்சம் மேல் ரூ.15.00 இலட்சம் வரை– 8% வட்டி விகிதம்

திரும்ப செலுத்தும் காலம் : 3 முதல் 5 ஆண்டுகள்

1. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.

2. குடும்பஆண்டு வருமாணம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

5. பொது காலகடன் திட்டம் / தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6% முதல் 8 % வரை.

6. பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5%.

7. நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக 15.00 இலட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 % மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம் ) அவர்களால் தரம் (Grading ) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

8. நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக 15.00 இலட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 %. ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

9. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000/- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 %.

10. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

11. விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கிகோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.

இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலக விவரம் பெற்றுக் கொள்ளலாம் எனவும், மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயனடையலாம்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback