உ.பி. பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு - புனித நீராட தடை விதிப்பு
உ.பி. பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு - புனித நீராட தடை விதிப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த 13ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை நடக்கிறது.
கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள், கங்கை, யமுனை, மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (29.01.2025) தை அமாவாசை என்பதால் அதிகாலை முதலே லட்சக்கணக்கானோர் திரண்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.
கூட்ட நெரிசல் காரணமாக பலர் கீழே தவறி விழுந்தனர். இதனால் 31 பேர் பலியானதாக சொல்லப்படுகிறது. ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த கூட்ட நெரிசலால் மேலும் மேலும் கும்பமேளாவுக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் கூட்ட அதிகமாக இருப்பதால் நீராடியவர்கள் வெளியே வந்து மற்றவர்களுக்கு வழி விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் நெரிசலில் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் மகா கும்பமேளாவில் புனித நீராடத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்
