Breaking News

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றே வங்கி கணக்கில் ரூ.1,000 தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றே வங்கி கணக்கில் ரூ.1,000 தமிழக அரசு உத்தரவு

தமிழர் திருநாளாம்  பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக்  கொண்டாடிட அனைத்து  அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில்  வசிக்கும்  குடும்பத்தினருக்கு   தலா  ஒரு கிலோ  பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கிட தமிழ்நாடு  அரசு  அறிவிப்பு.

2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்பு. 

தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும். பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 

2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.20.94.585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். 

இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

டோக்கன்:-

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 9-01-2025 முதல் சுழற்சி முறையில் வழங்கப்படும். 

நியாய விலைக்கடை ஊழியர்கள், பயனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று பரிசுத் தொகுப்பு பெறவேண்டிய நாள், நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன்களை வழங்க வேண்டும்.

தெரு வாரியாக சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளப்படும் டோக்கன் குறித்த விவரம் நியாய விலைக்கடையில் குறிப்பிடப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது

கலைஞர் மகளிர் உரிமை தொகை:-

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் இன்று தொடங்கியுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் ரூ.1,000 இன்றே வரவு வைக்கப்பட்டுள்ளது. 

1.14 கோடி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 இன்றே வரவு வைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 14-ஆம் தேதி வங்கிக்கணக்குகளில் ரூ.1,000 வரவுவைக்கும் நிலையில் இன்று( ஜன.9) முதலே வரவுவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்னரே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Urimmai Thogai Scheme) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் அதேபோல் வரவு வைக்கப்பட்டது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback