Breaking News

பிப்ரவரி 1ம் தேதி முதல் OLA, UBER நிறுவனங்களில் ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது Auto and Taxi Drivers to Strike from February 1

அட்மின் மீடியா
0

பிப்ரவரி 1ம் தேதி முதல் OLA, UBER நிறுவனங்களில் ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது 



OLA, UBER நிறுவனங்களில் 25% வரை கமிஷன் வாங்குவதை கண்டித்து பிப்ரவரி 1ம் தேதி முதல் ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

ஓலா, உபர் நிறுவனங்களுக்காக ஆட்டோ ஓட்டமால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓட்டுநர் சங்கங்களின் நிர்வாகிகள்,“ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் 25 சதவிகிதம் கமிஷன் தொகையாக கேட்கின்றனர். இதனை கண்டித்து இரு நிறுவனங்களுக்காக ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தப் போகிறோம்.பிப். 1 முதல் ஆட்டோ ஓட்டாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்” என்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback