பிப்ரவரி 1 முதல் அமலாகும் மாற்றங்கள் என்ன என்ன முழு விவரம் from february 1
பிப்ரவரி 1 முதல் அமலாகும் மாற்றங்கள்
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சில குறிப்பிட்ட மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. நாளை முதல் மாறப்போகும் சில முக்கிய அம்சங்களை இங்கு பட்டியல் இட்டுள்ளோம்
LPG சிலிண்டர் விலை
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. மாதத்தின் முதல் நாளில் காஸ் சிலிண்டர் விலை மாறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றங்கள் தொடர்ந்து காணப்படுகின்றன.
UPI பரிவர்த்தனை ஐடி விதி மாற்றம்
சிறப்பு எழுத்துக்கள் கொண்ட ஐடிகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துதல் நிராகரிக்கப்படும்.
பிப்ரவரி 1ம் தேதி முதல் சிறப்பு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஐடிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் ஏற்கப்படாது என தெரிவித்துள்ளது.
எண்ணெழுத்து மற்றும் எழுத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஐடி மூலம் மட்டுமே பயனர்கள் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த விதியை பின்பற்றாதவர்களின் ஐடிக்கள் பிளாக் செய்யப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி கார் விலை உயர்வு
நாட்டின் முன்னணி மற்றும் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தனது கார்கள் மற்றும் எஸ்யூவி-க்களின் விலைகளை ரூ.32,500 வரை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மாடலை பொறுத்து நிறுவனம் திட்டமிட்டுள்ள விலை அதிகரிப்பானது ரூ.1,500 முதல் ரூ.32,500 வரை இருக்கும். தொடர்ந்து அதிகரித்து வரும் உள்ளீடு செலவுகள் (input costs) மற்றும் செயல்பாட்டு செலவுகளை (operational expenses) ஈடுகட்ட எடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி சேவை கட்டணம்
அதன் வங்கி சேவை கட்டணங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது, இது பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும். இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்புகளில் திருத்தங்கள் மற்றும் பல்வேறு வங்கி கட்டணங்களுக்கான புதுப்பிப்புகள் இதில் அடங்கும்.
மெட்ரோ பார்க்கிங் பாஸ்
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் பாஸ் வழங்குவது பிப்ரவரி.1 முதல் நிறுத்தம் செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 01.02.2025 முதல் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது.அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தும் இடங்கள் இனி பயன்படுத்தப்படும். பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவும்,
Tags: இந்திய செய்திகள்
