Breaking News

விமானத்தில் செல்ல ஒரு ஹேண்ட் லக்கேஜ் மட்டுமே அனுமதி புதிய கட்டுப்பாடு முழு விவரம் இதோ! New Hand Baggage Rules

அட்மின் மீடியா
0

விமானத்தில் செல்ல ஒரு ஹேண்ட் லக்கேஜ் மட்டுமே அனுமதி புதிய கட்டுப்பாடு முழு விவரம் இதோ! New Hand Baggage Rules

விமானத்தில் செல்ல லக்கேஜ்களுக்கு புதிய கட்டுப்பாடு முழு விவரம் இதோ! New Hand Baggage Rules



இந்தியாவின் சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (BCAS-Bureau of Civil Aviation Security) மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (Central Industrial Security Force-CISF) ஆகியவை இணைந்து விமான நிலைய செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த பயணிகள் கையில் கொண்டு செல்லும் ஹேன்ட் லக்கேஜ்களுக்கு கடுமையான அளவு மற்றும் எடை கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

விமான நிறுவனங்களின் லக்கேஜ் கொள்கைகள்: 

1. ஏர் இந்தியா: எகானமி வகுப்பு பயணிகளுக்கு 7 கிலோ பையையும் பிஸினஸ் வகுப்பிற்கு 10 கிலோ பையையும் அனுமதிக்கும் ஒரு பை வரம்புக்கு அனுமதிக்கிறது.

2. இண்டிகோ ஏர்லைன்ஸ்: அதிகபட்சம் 7 கிலோ மற்றும் 115 செ.மீ. ஒருங்கிணைந்த பரிமாணங்களில் உள்ள ஒரு கேபின் பை மற்றும் 3 கிலோ வரையிலான பர்ஸ் அல்லது லேப்டாப் பை போன்ற சிறிய தனிப்பட்ட பொருளை அனுமதிக்கிறது. 

எகானமி வகுப்பில் பயணம் செய்பவர்கள் தங்களுடன் அதிகபட்சம் 7 கிலோ எடையிலான ஒரு பையை மட்டுமே கையில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

முதல் வகுப்பு அல்லது பிசினஸ் கிளாஸில் பயணம் செய்பவர்கள் அதிகபட்சம் 10 கிலோ எடையிலான ஒரு பையை மட்டுமே கையில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த பையின் உயரம் 55 சென்டிமீட்டருக்கு மிகாமலும், நீளம் 40 சென்டி மீட்டர் மற்றும் அகலம் 20 சென்டி மீட்டருக்குள்ளும் இருக்க வேண்டும். 

கேபின் லக்கேஜ்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, தாமதங்களைக் குறைத்து, போர்டிங் செயல்முறையை விரைவுபடுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேபின் பேக்கின் அளவு 55 செ.மீ., உயரமும், 40 செ.மீ., நீளமும், 20 செ.,மீ., அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும்

ஒருவேளை பயணிக்கு கூடுதல் எடையில் உடமைகளை எடுத்துச் செல்ல வேண்டுமானால், அதற்கேற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படும்

கடந்த மே மாதம் நான்காம் தேதிக்கு முன்பாக விமான டிக்கெட் முன்பதிவு செய்து தற்போது வரை பயணம் செய்யாமல் இருக்கும் பயணிகள் மட்டும் பழைய விதிமுறையின் படி லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பயணிகளுக்கெல்லாம் புதிய விதிமுறைப்படி தான் எடுத்துச் சொல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback