அண்ணா பல்கலை கழகம் FIR வெளியான விவகாரம் மத்திய அரசின் NIC அறிவிப்பு
அண்ணா பல்கலை கழகம் FIR வெளியான விவகாரம் மத்திய அரசின் NICஅறிவிப்பு
IPCஇல் இருந்து BNS குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் FIR கசிந்ததாக தமிழ்நாடு அரசுக்கு, தேசிய தகவல் மையம் பதில் அளித்துள்ளது.
FIR கசிவுக்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் அண்ணா பல்கலைக்கழக FIR கசிந்த விவகாரத்தில் மத்திய அரசு இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று மத்திய அரசின் NIC (National Informatics Centre) தெரிவித்திருக்கிறது!
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இ
இந்நிலையில் இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு குறித்து பதியப்பட்ட, FIR 2இல் IPCஇல் இருந்து BNS குற்றவியல் சட்டத்திற்கு குற்றவியல் சட்டத்திற்கு மாற்றும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்த தகவல் கசிந்து இருக்கலாம்.
பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் வழக்கில் பதியப்பட்ட எஃப்ஐஆர் எப்படி வெளியானது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்.
மேலும் முக்கிய வழக்குகள் மற்றும் பாலியல் வழக்குகளின் எஃப்ஐஆர்களை பார்வையிடுவதை முடக்குவது குறித்து மீண்டும், தொழில்நுட்ப ரீதியாக சரி செய்ய எஸ்சிஆர்பி குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என தேசிய தகவல் மைய மூத்த இயக்குனர் கூறியுள்ளார்.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
