Breaking News

தமிழ்நாடு ஆளுநருடன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திப்பு ஆளுநரிடம் அளித்த மனு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு ஆளுநருடன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திப்பு ஆளுநரிடம் அளித்த மனு முழு விவரம்


 

 


தமிழ்நாடு ஆளுநருடன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:-

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் மேதகு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்தோம். 

எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். 

மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள். அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார். நன்றி. 

இச்சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடன் இருந்தனர், ஆளுநரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்திக்காமல் கையசைத்து விட்டு சென்றார் விஜய்

ஆளுநர் விஜய் சந்திப்பு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1873645686039986351

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback