Breaking News

ஆளுநரை சந்திக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காரணம் என்ன முழு விபரம்

அட்மின் மீடியா
0

ஆளுநரை சந்திக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காரணம் என்ன முழு விபரம்


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புப் பிரிவு ஆலோசகராக இருக்கும் திருஞானசம்பந்தம் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் 1 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback