Breaking News

பேச்சுவார்த்தையில் உடன்பாடு தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் சந்திப்பு முழு விபரம்

அட்மின் மீடியா
0

பேச்சுவார்த்தையில் உடன்பாடு தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் சந்திப்பு முழு விபரம்



புதுச்சேரியில் நேற்று நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது. 

ராமதாஸ் அவர்கள் பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக மூத்த மகள் காந்தியின் மகன் பரசுராமன் முகுந்தனை அறிவித்த போது அன்புமணி கடும் எதிர்ப்பு. ஒரு கட்டத்தில், நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியில் இருக்க முடியாது என்று ராமதாஸ் எச்சரித்தார்

இதனை தொடர்ந்து மேடையில் ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுகிட்ட அன்புமணி ராமதாஸ் பனையூரில் தன்னுடைய அலுவலகம் இருப்பதாகவும் தன்னை சந்திக்க விரும்புபவர்கள் அங்கே வந்து சந்திக்கலாம் என்றும் கூறினார். இதையடுத்து விருப்பமில்லாதவர்கள் கட்சியை விட்டு விலகிக் கொள்ளலாம் என ராமதாஸ் கோபமாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் தந்தை - மகன் இடையே சமரசம் பேசினர். இந்நிலையில், இன்று (டிச.,29) தைலாபுரம் தோட்டத்தில் தந்தையை அன்புமணி சந்தித்தார். இருவரும், குடும்பத்தினர் முன்னிலையில் பிரச்னை பற்றி நீண்ட நேரம் பேசினர். 

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது:-

கட்சியின் பொதுக்குழுவில் காரசார விவாதம் நடப்பது சகஜம். எல்லா கட்சியிலும் நடந்தது போல நேற்றைய தினம் நடந்தது!

கட்சியின் உட்கட்சி பிரச்னை குறித்து மற்றவர்கள் பேசக் கூடாது; பாமகவின் உட்கட்சி பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

நேற்று ராமதாஸ் உடன் மோதல் வெடித்த நிலையில் இன்று பேச்சுவார்த்தைக்கு பிறகு அன்புமணி விளக்கம்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback