சென்னை ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது
சென்னை- தனது ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது
சென்னை கிண்டியில் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும் தனியார் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியுமான சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக பணிபுரியும் சக்திவேல் என்பவர் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளராக உள்ளார். மேலும் கிண்டி மடுவின்கரையில் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சென்னை சேலையூர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் கடந்த 6 மாதங்களாக வேலை செய்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணை சக்திவேல் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவே, தான் கொடுத்த இரண்டு லட்சத்தை உடனே தர வேண்டும் எனக்கூறி மிரட்டி உள்ளார்.
இது தொடர்பாக இளம்பெண் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சக்திவேலை கைது செய்து நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
