அன்புமணி - ராமதாஸ் மோதல் யார் இந்த முகுந்தன் முழு விவரம்..
அன்புமணி - ராமதாஸ் மோதல் யார் இந்த முகுந்தன் முழு விவரம்..
புதுச்சேரியில் இன்று நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் வெடித்திருக்கிறது.
பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக பரசுராமன் முகுந்தனை அறிவித்த போது அன்புமணி கடும் எதிர்ப்பு. இது குறித்த அறிவிப்பை இன்று புதுவையில் நடந்த புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அவர் அறிவித்தார்.
ஆனால் அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது வார்த்தை போராக வெடித்தது. ஒரு கட்டத்தில், நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியில் இருக்க முடியாது என்று ராமதாஸ் எச்சரித்தார்
இதனை தொடர்ந்து மேடையில் ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுகிட்ட அன்புமணி ராமதாஸ் பனையூரில் தன்னுடைய அலுவலகம் இருப்பதாகவும் தன்னை சந்திக்க விரும்புபவர்கள் அங்கே வந்து சந்திக்கலாம் என்றும் கூறினார். இதையடுத்து விருப்பமில்லாதவர்கள் கட்சியை விட்டு விலகிக் கொள்ளலாம் என ராமதாஸ் கோபமாக தெரிவித்தார்.
கட்சியை நிறுவியது நான்தான் நான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்றும் விருப்பம் இல்லாதவர்கள் வெளியே செல்லலாம் என்றும் ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்தார்
யார் இந்த முகுந்தன்
பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி -பரசுராமன் தம்பதியினரின் மூன்றாவது மகன் தான் இந்த முகுந்தன்
பொறியாளரான முகுந்தன், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர் முகுந்தன் தற்போது பாமகவில் ஊடகபேரவை மாநில செயலாளராக இருக்கிறார்,
முன்னதாக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் இளைஞரணி தலைவர் பதவியிலின் இருந்தது குறிப்பிடத்தக்கது
தமிழ்குமரன் பதவி விலகிய நிலையில் புதிய தலைவராக முகுந்தன் என ராமதாஸ் அறிவித்ததால் அன்புமணி- ராமதாஸ் இடையே வார்த்தை மோதல்
முகுந்தன் பரசுராமனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊடக பேரவை மாநில செயலாளராக பதவி வழங்கப்பட்டது.
இளைஞரணித் தலைவராக நியமித்துள்ளார் ராமதாஸ் Verified Orgs & Profile More முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமித்ததால் ராமதாஸ் - அன்புமணி இடையே வார்த்தைப்போர்
இந்நிலையில் இளைஞரணித் தலைவராக நியமித்துள்ளார் ராமதாஸ் தனது சகோதரி மகனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
