தென் கொரியாவை தொடர்ந்து கனடாவில் 80 பயணிகளுடன் தரையிறங்கும் போது விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து! வீடியோ
தென் கொரியாவை தொடர்ந்து கனடாவில் 80 பயணிகளுடன் தரையிறங்கும் போது விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து! வீடியோ
Air-Canada விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்து விபத்து, நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள் - பதறவைக்கும் வீடியோ
80 பயணிகளுடன் சென்ற Air-Canada விமானம், லேண்டிங் கியர் செயலிழந்த நிலையில் Halifax விமான நிலையத்தில் அவசரமாக தரையிங்கியபோது விமானத்தின் இறக்கை ஓடுதளத்தில் உரசி தீப்பிடித்தது. இச்சம்பவத்தில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது
கனடாவில் உள்ள ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் சுமார் 80 பயணிகளுடன் ஏர் கனடா விமானம் தரையிறங்கியது. ஆனால், தரையிறங்கும் போது விமானத்தின் தரையிறங்கும் கருவி செயலிழந்தது. இதனால் விமானத்தின் இறக்கை பகுதி ஓடுபாதையில் உரசி, திடீரென தீப்பிடித்தது.
விமானத்தில் தீப்பற்றி எரிவதைப் பார்த்த பயணிகள் பயத்தில் அலறத் தொடங்கினர்.இதற்கிடையில், விமான நிலைய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் மூலம் விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 80 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தென் கொரியாவில் விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் கனடாவில் விமானம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1873274165089976427
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
