Breaking News

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாணவியின் அடையாளத்தை எஃப்ஐஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த மாணவி படிப்பை தொடர அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

அவரிடம் எந்த தேர்வு கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. 

பாதிக்கப்பட்ட மாணவி தொடர்ந்து படிப்பை முடிக்க நடவடிக்கை வேண்டும். 

மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை டிஜிபி அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback