பாஜக அண்ணாமலையுடன் தவெக தலைவர் விஜய் இருக்கும் புகைப்படம் உண்மை என்ன
பாஜக அண்ணாமலையுடன் தவெக தலைவர் விஜய் புகைப்படம் உண்மை என்ன
பரவும் செய்தி:-
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையுடன் நிற்கும் புகைப்படமும்
தி.மு.க-வை எதிர்க்க பா.ஜ.க போட்ட ரகசிய திட்டம் அம்பலமானது. திராவிடத்தை ஒழிக்க கள்ளத்தனமாக அண்ணாமலையுடன் லண்டனில் சீக்ரெட் மீட்டிங் போட்ட நடிகர் விஜய்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, லண்டன் சென்று விஜய் ரகசியமாக சந்தித்ததாகவும், இதனை தொடர்ந்து திமுகவை தவிர வேறு எந்த கட்சியையும் குறிப்பாக, விஜய்யை விமர்சிக்க கூடாது என்று பாஜகவினருக்கு அண்ணாமலை உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது என வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையுடன் நிற்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
உண்மை என்ன:-
நடிகர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் அண்ணாமலையுடன் நிற்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஆகும்
கடந்த 2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் நடிகர் விஜய் அவர்களை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடிட் செய்து பரப்பு கின்றார்கள்
புதுச்சேரி முதல்வருடன் நடிகர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் அவர்களும் உள்ள புகைப்படத்தை பல்வேறு ஊடகங்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.
அட்மின் மீடியா ஆதாரம்:-
https://x.com/jayapluschannel/status/1489930794399576064/photo/1
அட்மின் மீடியா ஆதாரம்:-
https://x.com/ThanthiTV/status/1489922937109245954/photo/1
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: FACT CHECK மறுப்பு செய்தி