மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்ற நபரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள் வீடியோ
மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்ற நபரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள் வீடியோ
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்ற நபரை மருத்துவமனை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்த வீடியோ
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய் மருத்துவருக்கு கத்திக்குத்து. தப்பி ஓட முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். மருத்துவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாயாருக்கு, கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் ஒரு மாதமாகப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என விக்னேஷ் குற்றம்சாட்டி மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, விக்னேஷ் உட்பட 4 பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1856629985181872250
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ