சிறு வணிகர்கள் கடை வாடகைக்கு 18% ஜிஎஸ்டி? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
சிறு வணிகர்கள் கடை வாடகைக்கு 18% ஜிஎஸ்டி? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் செப். 23 ஆம் தேதி நடைபெற்றது. அதில் வாடகை கட்டடத்தில் செயல்படும் கடைகளுக்கு, நவம்பா் மாதம் முதல் 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சா் அறிவித்துள்ளாா்.
ஆர்ப்பாட்டம்:-
கடை வாடகை தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் நவம்பா் 19 ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என தஞ்சாவூா் மாவட்ட வணிகா் சங்கப் பேரவை முடிவு செய்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியில் பா.ஜ.க அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியும், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளையும் அமல்படுத்தி வருகிறது.
தற்போது, வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23-ந்தேதி கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிக மோசடியானது மட்டுமின்றி, வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோசமான தாக்குதலாகும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளது சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூர தாக்குதலாகும்.
மத்திய பா.ஜ.க அரசின் இந்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்" என்று பாலகிருஷ்ணன் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்