Breaking News

2025 முதல் ஏர் கேரளா சேவைக்கு மத்திய அரசு அனுமதி

அட்மின் மீடியா
0

ஏர் கேரளா விமான நிறுவனம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளது. 

2025-ம் ஆண்டில் உள்நாட்டு சேவைகளை 'ஏர் கேரளா' தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவை பூர்வீகமாக கொண்டு வளைகுடாவில் நாடுகளில் தொழில் செய்து வரும்  தொழிலதிபர்களான அஃபி அஹமது மற்றும் அயூப் கல்லடா ஆகியோரின் 18 வருட முயற்சியால், கேரளாவின் முதல் விமான நிறுவனமாக ஏர் கேரளா உருவெடுத்துள்ளது; 2005ம் ஆண்டு ஏர் கேரளா விமான திட்டம் முதன்முதலில், கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டியால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதன் மூலம் ஏர் கேரளா நிறுவனம் 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மூன்று விமானங்களுடன் தொடங்கப்படும் விமான சேவை பின்னர் படிப்படியாக வளைகுடா நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback