Breaking News

வாரிசு சான்றிதழ் விதிமுறைகளில் திருத்தம் அரசானை வெளியீடு புதிய திருத்தம் என்ன முழுவிவரம் legal heir certificate

அட்மின் மீடியா
0

வாரிசு சான்றிதழ் விதிமுறைகளில் திருத்தம் அரசானை வெளியீடு புதிய திருத்தம் என்ன முழுவிவரம்



வாரிசு சான்றிதழ் பெறுவது தொடர்பான அரசா ணையில், திருமணமாகாத நபரின் இரண்டாம் நிலை வாரிசுகள் தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சொத்து வைத்துள்ள நபர்கள் இறந் தால், அவரது சொத்தை வாரிசுகள்பெற, வாரிசுசான் றிதழ் அவசியம். இதை, வருவாய்த் துறைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம்.

ஆன்லைன் முறையில் வாரிசு சான்றிதழ் வழங் கும் போது, ஒரு நபரின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை வாரிசு கள் யார் என்பது குறித்த வரையறை தயாரிக்கப் பட்டது. இந்த விபரங்கள் அடங்கிய அரசாணையை, 2022ல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டது.

இரண்டாம் நிலை வாரி சுகள் யார் என்பதற்கான வரையறையில், ஹிந்து வாரிசுரிமை சட்டத்தின் விதிமுறைகள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்ற புகார் எழுந்தது. 

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வாரிசு சான்றிதழில் தேவையான திருத் தங்களை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், வாரிசு சான்றிதழ் தொடர்பான  அரசாணையில், உரிய

திருத்தங்கள் செய்து, புதியஆணையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை வெளியிட்டுள்ளது

புதிய திருத்தங்கள்

வருவாய்த் துறை மேற்கொண்டுள்ள திருத்தம் விபரம்:

கணவர் இறந்தால், அவரது மனைவி, குழந்தை கள், சட்டப்படி தத்து எடுக்கப்பட்ட குழந்தை கள் மற்றும் பெற்றோர் வாரிசுகளாவர்

மறுமணம் புரிந்த நபர் இறந்தால், அவரது இறந்த அல்லது விவாகரத்து பெற்ற மனைவியின் குழந் தைகள், தற்போதைய மனைவி, குழந்தைகள், தத்து எடுத்த குழந்தைகள், பெற்றோர் ஆகி யோர் வாரிசுகளாக வருவர்

திருமணமாகாத நபர் இறந்தால், அவரது பெற் றோர், உடன் பிறந்தோர் வாரிசுகளாவர்

கணவன், மனைவி, குழந்தைகள் இறந்தால், எஞ்சிய குழந்தைகள், தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோர் வாரிசுகளாவர்

குழந்தைகள் இல்லாத நிலையில், கணவன்,மனைவி இருவரும் இறந்தால், அவரது பெற்றோர், உடன்பிறந்தோர் வாரிசுகளாவர்

இந்த வரையறை அடிப்படையில், வாரிசு சான் றிதழ் கோரும் விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு எடுக்கலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback