Breaking News

Everest Fish Curry Masala எவரெஸ்ட் மீன் மசாலாவிற்கு சிங்கப்பூரில் அதிரடி தடை

அட்மின் மீடியா
0

Everest Fish Curry Masala எவரெஸ்ட் மீன் மசாலாவிற்கு சிங்கப்பூரில் அதிரடி தடை

பிரபல மசாலா நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லியின் அளவு அதிகம் இருப்பதாகக் கூறி, சிங்கப்பூரில் அதற்கு தடை விதித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்கள் நிறுவனங்களில் எவரெஸ்ட்டும் ஒன்று. இந்த நிறுவனம், தன்னுடைய மீன் குழம்பு மசாலாவை சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது. இந்நிலையில், எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்திருப்பதுடன், அதைச் சந்தையில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.

எத்திலீன் ஆக்சைடு அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் இருப்பதால், எவரெஸ்ட் மீன் கறி மசாலாவை இந்தியாவிலிருந்து திரும்பப் பெற ஹாங்காங் உணவு பாதுகாப்பு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது" என்று சிங்கப்பூர் உணவு ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் உணவு முகமை (SFA) வெளியிட்டுள்ள அறிக்கையில், ’எத்திலீன் ஆக்சைடு உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. நுண்ணுயிர் மாசுபாட்டைத் தடுக்க விவசாயப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூர் உணவு விதிமுறைகளின்கீழ், சாகுபடியின்போது மசாலாப் பொருட்களைக் கிருமிநீக்கம் செய்ய எத்திலீன் ஆக்சைடு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. 

குறைந்த அளவு எத்திலீன் ஆக்சைடு உள்ள பொருட்களை உட்கொள்வதால் உடனடி ஆபத்துகள் எதுவும் இல்லை.ஆனால், இது நீண்டகாலத்திற்கு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். 

இந்த தயாரிப்புகளை வாங்கிய நுகர்வோர் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை உட்கொண்டவர்கள் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.மேலும் தகவலுக்கு நுகர்வோர் தங்கள் கொள்முதல் நிலையத்தை தொடர்புகொள்ளலாம்” என அறிவுறுத்தியுள்ளது  சிங்கப்பூர் உணவு முகமை

சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்டதால், சிங்கப்பூர் உணவு நிறுவனம் இறக்குமதியாளரான எஸ்பி முத்தையா & சன்ஸ் நிறுவனத்தை தனது தயாரிப்புகளைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூரில், அவர்களது பயன்பாட்டுக்கான, இந்தியாவில் தயாரான மசாலா தயாரிப்பு ஒன்று தடை செய்யப்பட்டிருப்பதும், திரும்பப்பெற உத்தரவிடப்பட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் உணவு முகமையின் இந்த அறிவிப்புக்கு எவரெஸ்ட் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை.

இது குறித்து சிங்கப்பூர் உணவு முகமை வெளியிட்டுள்ள அறிக்கை படிக்க

https://www.sfa.gov.sg/docs/default-source/accredited-overseas-attachments/180424-media-release---recall-of-everest's-masala-fish-curry.pdf?sfvrsn=e0a4f694_1

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback