Breaking News

எந்த வாக்குச்சாவடியில் நாம் வாக்களிக்க வேண்டும்... தெரிந்து கொள்வது எப்படி தேர்தல் ஆணைய ஆப் முழு விவரம்

அட்மின் மீடியா
0

எந்த வாக்குச்சாவடியில் நாம் வாக்களிக்க வேண்டும்... தெரிந்து கொள்வது எப்படி தேர்தல் ஆணைய ஆப் முழு விவரம்

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டும் போதாது, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் .

                                        

அதேபோல் வீடு வீடாக பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் ஒரு அடையாளத்துக்கு தான். அதை வைத்து ஓட்டு போட முடியாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டினால் மட்டுமே 19ம் தேதி நடை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும்

வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா, வரிசை எண் , பாகம் எண், நாம் எந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள, தேர்தல் ஆனைய voter helpline app இல் தெரிந்து கொள்ளலாம். 

தேர்தல் ஆணைய ஆப் பற்றி தெரிந்து கொள்ள:-

ஆப் இன்ஸ்டால் செய்து அந்த ஆப்பில் மொபைல் எண் பதிவு செய்து லாகின் செய்து கொள்ளுங்கள்

அடுத்து அதில் உங்கள் வாக்காளர் பெயர் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவு செய்தால் அதில் உங்கள் தகவல்கள் அனைட்ந்தும் பெற முடியும். 

அதாவது எந்த வாக்குச்சாவடியில் நாம் வாக்களிக்க வேண்டும், எந்த பள்ளியில் வாக்குச்சாவடி மையம் உள்ளது என அனைத்து தகவலும் தெரிந்து கொள்ள முடியும். 

ஆப் இன்ஸ்டால் செய்ய் இங்கு கிளிக் செய்யவும்

https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen&hl=en&gl=US

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback