Breaking News

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள் ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி lok sabha election 2024

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் உங்கள் தொகுதியில்  யார் யார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்? என தெரிந்து கொள்வது எப்படி


17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.  அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 

இறுதியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 01.01.2024 அன்று நிலவரப்படி நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 968.8 மில்லியன் ஆகும். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 

வேட்பு மனுத்தாக்கல் துவங்கும் நாள்:-  20.03.2024

வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 27.03.2024

வேட்பு மனுபரிசீலனை :- 28.03.2024

வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்:-  30.03.2024

வாக்குப்பதிவு நாள்;-  19.04.2024

வாக்கு எண்ணிக்கை நாள் :- 04.06.2024

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா?

தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் தினமும் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பார்க்கலாம்.

உங்கள் பகுதியில் யார் வேட்பாளர் என அறிய  இங்கு கிளிக் செய்யவும்

https://affidavit.eci.gov.in/candidate-affidavit

மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து அதில் நம் தமிழ்நாடு என்பதை செலக்ட் செய்யுங்கள்

அடுத்து அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளும் இருக்கும் அதில் உங்களுக்கு தேவையான தொகுதியை செலக்ட் செய்து கொள்ளுங்கள்

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்கள், எந்த கட்சியை சேர்ந்தவர், சுயேட்சையா என அனைத்து விவரங்களும் இருக்கும்

அடுத்து அதில் View more என்பதை கிளிக் செய்து வேட்பாளர் பற்றிய பல தகவல்களை பார்க்கலாம்

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://affidavit.eci.gov.in/

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback