Breaking News

கேரள ஆறாட்டுபுழா திருவிழாவில் இரண்டு யாணைகள் மோதிகொண்ட வீடியோ arattupuzha pooram elephant attack

அட்மின் மீடியா
0

ஆறாட்டுப்புழா பூரம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான கோயில் திருவிழா ஆகும். 

ஏழு நாள் நடக்கும் திருவிழாவின் உச்சமானது விழாவின் கடைசி இரண்டு நாட்கள் ஆகும். திருவிழாவின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் மாலை சாஸ்தவிந்தே மேளம் என்று அழைக்கப்படும் விழாவின் ஒரு பகுதியாக, தாளக் குழுக்கள் மற்றும் அலங்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பும் நடத்தப்படும். 

இந்த விழாவானது திருச்சூர் மாவட்டத்தின் ஆறாட்டுப்புழாவில் உள்ள ஆறாட்டுபுழா கோவிலில் நடைபெறுகிறது. பூரம் தேவமேளா என்று அழைக்கப்படுகிறது, 


இந்த சிறப்புமிக்க ஆராட்டுப்புழா கோயில் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது அப்போது அலங்கரிக்கபப்ட்ட யானைகள் அணிவகுத்து சென்றது அதில் திடீரென இரண்டு யானைகள் மோதிக் கொண்ட சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்

ஆராட்டுப்புழா: திருச்சூர் தாரக்கால் கோயில் திருவிழாவின் நிறைவு விழாவில், வெள்ளிக்கிழமை இரவு நடந்த நிகழ்வில் யானை அட்டகாசம் செய்ததில் பலர் காயமடைந்தனர்.

இரவு 10:30 மணியளவில் ஊரகத்தின் 'அம்மத்திருவடி' தெய்வானைக்கு யானை அணிவகுத்துச் சென்ற குருவாயூர் ரவிகிருஷ்ணன் திடீரென வெறியாட்டம் போட்டதால், திருவிழா நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

யானையின் பாகன் ஸ்ரீகுமார் (53) உயிர் தப்பினார். லேசான காயம் அடைந்த அவர், கூர்க்கஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆறாட்டுப்புழா திருவிழாவிற்க்காக  கொண்டுவரப்பட்ட மற்றொரு யானையான புதுப்பள்ளி அர்ஜூனனையும் குறிவைத்து தாக்கியது ரவிகிருஷ்ணன் யானை. 

இதையடுத்து, இரண்டு யானைகளும் ஒன்றையொன்று சரமாரியாக தாக்கியதால், திருவிழாவிற்கு வந்திருந்தவர்கள் திணறினர்.

யானைகளால் தூக்கிச் செல்லப்பட்ட நபர்கள் தரையில் வீசப்பட்டு காயம் அடைந்தனர். மேலும், அங்கிருந்து தப்பியோட முயன்ற பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.படுகாயம் அடைந்த அர்ஜூனன் என்ற யானை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடியது. பின்னர் யானைகள் பாகன்களால் அடக்கி ஒடுக்கப்பட்டனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வீடியோ காட்சி பார்க்க:-

https://twitter.com/ag_Journalist/status/1771369449326866579

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback