Breaking News

ரம்ஜான் பண்டிகை தேர்வு அட்டவணையில் மாற்றம் முழு விபரம் annual exam date change

அட்மின் மீடியா
0

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.10 மற்றும் ஏப்.12-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்.4 மற்றும் ஏப்.6-ம் தேதிகளுக்கு மாற்றப்பவடுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி பள்ளி மாணவர்களுக்கு தேர்வானது விரைவாக நடைபெற்றுக் கொண்டு வருகிற நிலையில் தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வானது ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ரம்ஜான்(ஏப்ரல்10) பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்ரல் 4 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பார்வை (1)ல் காணும் செயல்முறைகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் நடத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

                        


இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

ஈகைப் பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளின் தேதியை மாற்றி அமைக்கக் கோரி பார்வை ( 3 ல் கண்டுள்ளபடி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களால் அரசுக்கு கோரிக்கைகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி , தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. 

பார்வை ( 1 ) யில் காணும் தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்ட 4 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளை 104.2024 மற்றும் 12.04.2024 ஆகிய தேதிகளுக்கு பதிலாக 04.04.2024 மற்றும் 06.04.2024 ஆகிய தேதிகளில் பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட உருது பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கிட சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்குமாறு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback