Breaking News

ஏப்ரல் 1 முதல் Good Morning மெசேஜ் அனுப்பினால் 18% GST என வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோ? உண்மை என்ன முழு விவரம் Should We Pay 18% GST on Good-Morning Messages

அட்மின் மீடியா
0

ஏப்ரல் 1 முதல் வாட்ஸ் அப்பில் Good Morning மெசேஜ் அனுப்பினால் 18% GST என பரவும் ஆடியோ உண்மை என்ன முழு விவரம்

பரவும் வதந்தி:-

வாட்ஸப்பில் பரவும் ஆடியோவில்

செல்போனில் 'Good Morning' செய்தி அனுப்பினால் அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது உங்களிடம் 18% GST வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக இரு ஆடியோ வாட்ஸ் அப்பில் பரப்பப்படுகிறது மேலும் அதில்

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு காலை வணக்கம் செய்திகளை அனுப்பினால், எச்சரிக்கையாக இருங்கள். இது புதிய நிதியாண்டில் உங்கள் பாக்கெட்டில் கனமாக இருக்கும். ஏப்ரல் 1 முதல், அரசாங்கம். அனுப்பப்படும் குட் மார்னிங் மெசேஜ்களுக்கு வரி விதிக்கப்படும்.ஜிஎஸ்டி வரியில் குட் மார்னிங் வரியாக வசூலிக்கப்படும்.செல்பேசி தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் லேக் பால் கூறுகையில், நீங்கள் எந்த குட் மார்னிங் செய்தியை அனுப்பினாலும் வாட்ஸ்அப் மெசஞ்சர் வைத்திருக்கும். இது போன்ற செய்திகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது." 

உண்மை என்ன:-

குட் மார்னிங் மெசேஜ் அனுப்பினால் 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற செய்தி  வைரலாகி வருகிறது. இந்தச் செய்தி குறித்து  அட்மின் மீடியா உண்மைச் சரிபார்ப்பு குழு நடத்திய ஆய்வில் ​ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஹிந்தி நாளிதழில் நையாண்டியாக வெளிவந்த செய்தி அது எனவும் தற்போது அந்த செய்தி மீண்டும் வைரல் ஆகின்றது என தெரியவந்தது

மத்திய அரசு இதுகுறித்த தகவல் எதுவும் வெளியிடவில்லை.2018, மார்ச் 2ம் தேதி 'நவ்பாரத் டைம்ஸ்' எனும் நாளிதழில் நகைச்சுவையாக வெளியானது என்றும் அந்த செய்திக்குக் கீழே 'கவலைப்பட வேண்டாம், இது ஹோலி' என இந்தியில் குறிப்பிட்டு உள்ளார்கள்

இது குறித்து ABP LIVEவெளியிட்டுள்ள செய்தியில் பரவக் கூடிய இந்த தகவல் 2018, மார்ச் 2ம் தேதி ’நவ்பாரத் டைம்ஸ்’ எனும் நாளிதழில் வெளியானது என்றும் அந்த செய்திக்குக் கீழே ‘கவலைப்பட வேண்டாம், இது ஹோலி’ என இந்தியில் குறிப்பிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே யாரும் பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம் இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.abplive.com/news/india/know-truth-of-this-viral-message-19-813684

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback