Breaking News

தேர்தலை முன்னிட்டு 1 முதல் 9 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை மாற்றம் முழு விவரம் EXAM TIME TABLE 1 to 9 Std

அட்மின் மீடியா
0

ஏப்ரல் 13-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை துவங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 1-9 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 2 முதல் 12 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்படும் எனவும் அறிவிப்பு…


2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்துவது சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கீழ்க்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 0204. 2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும், 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆசிரியர்கள் 19.04.2024 அன்று நடைபெற உள்ள 18வது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 23.04.2024 முதல் 26.04.2024 வரையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான (2024-2025) மாணவர்கள் சேர்க்கை

போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும். 26.04.2024 அன்று இக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், கோடை விடுமுறை முடித்து பள்ளி திறக்கும் நாள்பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback