சர்வேயர் மூலம் நிலங்களை அளக்க இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் How to Apply for a Land Survey in online Tamil Nadu
சர்வேயர் மூலம் நிலங்களை அளக்க இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும்புதிய வசதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலவை செய்ய எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம்உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல்இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நில அளவை செய்யப்படும்தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசிவாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை/வரைபடம் ஆகியவற்றை https://eservices.tn.gov.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளும்வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இணையதள முகவரி:- https://tamilnilam.tn.gov.in/citizen
இங்கு கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி:-
பட்டா என்பது வருவாய் ஆவணத்தைக் குறிக்கிறது, அதே சமயம் சிட்டா என்பது உங்கள் சொத்தின் வடிவம், அளவு, இருப்பிடம் போன்ற விவரங்களைக் கொண்ட ஆவணமாகும். எளிய நடைமுறையைப் பின்பற்றி இந்த ஆவணத்தை உரிமையாளர்கள்
இ-சேவைகளை வழங்கும் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்
வியூ பட்டா & எஃப்எம்பி, டிஎஸ்எல்ஆர் எக்ஸ்ட்ராக்ட் அல்லது சிட்டா' என்று குறிப்பிடும் விருப்பத்தைக் காண்பீர்கள்.
நீங்கள் அதைக் கிளிக் செய்தவுடன், அது உங்களை ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பிவிடும், அங்கு உங்கள் மாவட்டம், கிராமம் அல்லது நகர்ப்புறம், விவரங்கள்.
அடுத்து, மேலும் தகவல் தேவைப்படலாம், எனவே அதற்கேற்ப பூர்த்தி செய்து உங்கள் அங்கீகார மதிப்பை உள்ளிடவும். முடிந்தவுடன் ஒவ்வொரு விவரத்தையும் சமர்ப்பிக்கவும்.
சமர்ப்பித்த பிறகு, உங்கள் நில அளவை ஆவணத்தின் நகல் திரையில் தோன்றும்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி