ஆதார் கார்டு, பான் கார்டு அல்லது ரேஷன் கார்டு எல்லாம் குடியுரிமை சான்று இல்லை -Indian citizenship proof avilable Documents
ஆதார் கார்டு, பான் கார்டு அல்லது ரேஷன் கார்டு மூலம் உங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் மட்டுமே குடியுரிமைக்கான சான்றாகக் கருதப்படும் என்று டெல்லி காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய குடியுரிமை சான்றுகள் சரிபார்ப்பின்போது, சட்டவிரோதமாக வசிக்கும் ஏராளமான வெளிநாட்டு குடிமக்கள், குறிப்பாக வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியாக்கள், ஆதார், பான் மற்றும் ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்தி இந்திய குடியுரிமையை தவறாகக் கோருவது கண்டறியப்பட்டது.
எனவே, வாக்காளர் அடையாள அட்டைகள் அல்லது இந்திய பாஸ்போர்ட்டுகள் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களின் DCP-களுக்கும் தங்கள் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மீது கண்காணிப்பை அதிகரிக்க டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆதார், பான், ரேஷன் கார்டுகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு மட்டுமே பயன்படும் என்றும் அவை குடியுரிமைக்கான சான்றாக கருதப்படுவதில்லை. என மத்திய அரசு தெரிவித்துள்ளது.