AI தொழில்நுட்பத்தில் சாட் செய்து திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ள இணையதளம் அறிமுகம் thirukural.ai
AI தொழில்நுட்பத்தில் திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ள இணையதளம் அறிமுகம் thirukural.ai
சென்னை நந்தம்பாக்கத்தில் பன்னாட்டு கணித் தமிழ் மாநாட்டை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்.
இந்த மாநாடாடு வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட நோக்கங்களோடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் கிஸ்புளோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம் தலைமையிலான
குழுவினர் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் திறக்குறளை எளிமையாக அறிந்துகொள்ள
உதவும் thirukuralai என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தினர்மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-
தமிழ் மெய்நிகர் அகாடமி (TamilVU.org) அதன் தலைவர் திரு. டி.உதயச்சந்திரன் ஐஏஎஸ். தமிழ் மொழியை தொழில்நுட்பத்தில் முன்னணியில் வைத்திருக்கும் வகையில், கனிதமிழ்24 மாநாட்டை முன்னின்று நடத்திய நிபுணர் குழுவால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருக்குறளுக்கு பல இணையதளங்கள் இருந்தாலும், GenAI தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ChatGPT போன்ற தன்மையால் இயங்கும் இணையதளங்கள் எதுவும் இல்லை.
திருக்குறள்.AI ஆனது Kissflow இன் CEO மற்றும் Dream Tamilnadu இன் கன்வீனரான சுரேஷ் சம்பந்தம் அவர்களின் தலைமையில் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், தமிழ் ஆர்வமுள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது.
திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ள இணையதளங்களில் பல்வேறு இணையதளங்கள் இருந்தாலும் அதில் அதைவிட முக்கியமாக நாம் தற்போது இணையதளம் AI தொழில்நுட்பத்தில் நாம் அதனை வெளியிட்டுள்ளோம்.
இந்த இறை தொழில்நுட்பத்தின் மூலம் நீங்கள் எந்த வித கேள்விகள் வேண்டுமானாலும் திருக்குறள் பற்றி கேட்டு அதில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும் நீங்கள் இதில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மற்றும் தங்கிலீஷ் ஆகிய முறைகளில் உங்கள் கேள்விகளை கேட்கலாம் , அதேபோல் திருக்குறள் பற்றி இதில் நான்கு உரை விளக்கங்கள் உள்ளன ஒன்று கலைஞர் கருணாநிதி அவர்களின் உரை மற்றும் பரிமேல் அழகர் அவர்களின் உரை , சாலமன் பாப்பையா அவர்களின் உரை மற்றும் மூவா அவர்களின் உரை உள்ளது என தெரிவித்துள்ளார்
https://www.thirukural.ai/
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி