தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமாநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அதன்படி இன்றும் நாளையும், தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் நாளை வரை ஒரு சில மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்