சாலையில் பைக் சாகசம்| கைது செய்து வாகனத்தை சுக்குநூறாக நொறுக்கிய கத்தார் அரசு வைரல் வீடியோ Motorbike stunt show in Qatar
சாலையில் பைக் சாகசம் கைது செய்து வாகனத்தை சுக்குநூறாக நொறுக்கிய கத்தார் அரசு வைரல் வீடியோ
கத்தாரில் பைக் சாகசம் செய்த இளைஞரின் வாகனத்தை பறிமுதல் செய்து, அதனை அரவை இயந்திரத்தில் போட்டு அழித்த கத்தார் காவல்துறை!
ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்த இளைஞரை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்
கத்தார் சாலைகளில் ஆபத்தான சாகசங்களை நிகழ்த்தி, தனது உயிருக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியதற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கத்தாரில் கைது செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட வீடியோவில், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் ஹெல்மெட் அணிந்து, தனது இரு சக்கர வாகனத்தில் நிற்பதைக் காட்டுகிறது.
கத்தாரின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ கிளிப்பைக் குறிப்பிட்டு, அதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் ஸ்டண்ட் செய்யும் போது அவரது உயிருக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஓட்டிய ஓட்டுநரையும் அவரது பைக்கையும் பறிமுதல் செய்த கத்தார் காவல்துறை தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிந்தது. மற்றும் அவருக்கு எதிரான நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கபப்ட்டுள்ளது என தெரிவித்துள்ளது
பொதுவாக கத்தார் போக்குவரத்துச் சட்டங்களை மீறுபவர்களுக்கு ஒரு வருடம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது QR 10,000 முதல் QR 50,000 வரையிலான அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது
வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்:-
https://twitter.com/MOI_Qatar/status/1735263116198375506
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ