சென்னையில் அதிர்ச்சி காதலியை கழுத்தை நெறித்து கொன்று வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்! நடந்தது என்ன
சென்னையில் அதிர்ச்சி காதலியை கழுத்தை நெறித்து கொன்று வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்!
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்ருதீன் என்பவரின் மகள் பவுசியா (20). இவர், குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர், கேரளாவை சேர்ந்த தாஜுதீன் என்பவரின் மகன் ஆசிக்(20). என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் தனியார் விடுதியில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் காதலன் ஆசிக், பவுசியா உடன் ஏற்பட்ட பிரச்சனையில் அவரை கொலை செய்துள்ளார். அத்துடன் பவுசியாவை கொலை செய்துவிட்டு அதை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்-லும் ஆசிக் வைத்துள்ளார்.
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்து அதிர்ச்சியடைந்த பவுசியாவின் தோழிகள், விரைந்து வந்து விடுதியில் பார்த்தபோது பவுசியா கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
உடனடியாக குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், உடனடியாக மாணவி பவுசியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆஷிக்கையும் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரனையில் காதலன் ஆஷிக் மாலை 4 மணி அளவில் தனக்கும் பவுசிகாக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் காதலி பவுசியாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாகவும் கூறியுள்ளார் இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்