கூகுள் பே, போன்பே ,பேடிஎம் மூலம் ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம் RBI அதிரடி அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
கூகுள் பே, போன்பே ,பேடிஎம் மூலம் ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம் RBI அதிரடி அறிவிப்பு!
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் டிசம்பர் மாத நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.
இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான யுபிஐ கட்டண வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இது கல்வி மற்றும் சுகாதார நோக்கங்களுக்காக யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்பவர்களுக்கு அதிக அளவில் பணம் செலுத்த உதவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Tags: இந்திய செய்திகள்