4 மாவட்டங்களில் நாளை ரேசன் கடைகள் இயக்கும் தமிழக அரசு உத்தரவு
4 மாவட்டங்களில் நாளை ரேசன் கடைகள் இயக்கும் தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் டிசம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வார இறுதியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரண்டு வாரங்கள் செயல்பாட்டில் இருக்கும். பணிக்கு செல்லும் குடும்பத்தினர் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுகிறது.
இந்நிலையில் மிக்ஜாம் புயலிற்கான வெள்ள நிவாரண தொகை ரூபாய் 6000 வழங்குவதற்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் டிசம்பர் 17ஆம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ள நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் டிசம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை ) ரேஷன் கடைகள் செயல்படும் என்று உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்