இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் தொடரும் கனமழை முழு விவரம்
இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் தொடரும் கனமழை முழு விவரம்
இதனால் இன்று 18.12.2023: தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் விருதுநகர், மதுரை மற்றும் தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல தூத்துக்குடி, குமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ,அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கி மற்றும் பொது சேவை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்